Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜனவரி 02 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டு மக்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை கடக்க வேண்டியுள்ளது. பண்டிகை உற்சாகத்தை கொன்றுவிட்டு, பொருளாதார வானவேடிக்கைகள் தோன்றியுள்ளன. ஒருபுறம், கொவிட் இன் புதிய பிறழ்வு பற்றிய ஆபத்தான செய்திகள் உள்ளன. மறுபுறம், டெங்கு நுளம்புகள், மக்களின் வாழ்க்கையைப் பிடியில் எடுக்க முயல்கிறது
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக கலைப் பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் குணரட்னம் சுகிதா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
புள்ளிவிவரங்களில் இருந்து வரும் அறிகுறிகள் நன்றாக இல்லை. 2023ஆம் வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசெம்பர் 26ஆம் திகதி வரையில் 85,619 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புள்ளி விவரங்களிலிருந்து மரணம் நம் தலைக்கு மேல் கடும் அபாயத்தில் இருக்கின்றது.
ஒருபுறம், நமது சுகாதார சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ஒருபுறம், போதிய மருந்து இல்லை. மருத்துவ உபகரணங்கள் இல்லை. தரம் தாழ்ந்த மருந்துகள் கோடி, கோடி செலவில் இறக்குமதி செய்யப்பட்டு, இறக்குமதி செய்வதாகக் கூறி, இந்த நாட்டில் தட்டுக் கொட்டகைகளில் தயாரிக்கப்படுகின்றன. கடத்தல் மாஃபியாக்களின் கூடாரமாக சுகாதாரத்துறை மாறியுள்ளது. தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த சந்தேகத்தின் பேரில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட பலர் சிறையில் உள்ளனர்.
இந்தச் சூழலில் ‘நோய்வாய்’ இருப்பது மன்னிக்க முடியாத பாவம். ஆனால் அதற்கு டெங்கு வைரஸ் காரணமல்ல. எமது சுற்றுப்புறங்கள் அசுத்தமாக இருப்பதால் டெங்கு கொசுக்கள் பெருகுகின்றன. சுற்றுப்புறங்களில் இருந்து தப்பித்து வீட்டிற்குள் நுழைந்து அழிவை ஏற்படுத்தக் காத்திருக்கின்றன.
மழைக்குப் பிறகு ஒரு தொற்றுநோய் சூழ்நிலை உருவாகலாம் என்பதைப் புரிந்து கொள்ள ஒரு மேதை தேவையில்லை. ஆனால், விபத்து குறித்து அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுத்தார்களா? என்று கேட்க வேண்டும். மக்களும் தங்களுக்கு வரப்போகும் ஆபத்து குறித்து தனிக்கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக அழிவின் சதுப்பு நிலம் விரிவடைந்தது.
இந்த கொடிய ஆபத்தில் இருந்து உங்களை மட்டும் காப்பாற்ற முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது பெரிய தவறு. ஆனால் சிலர் அப்படி நினைக்கிறார்கள். வீடு, தோட்டத்தை மட்டும் சுத்தம் செய்து, தகர டப்பா உள்ளிட்ட குப்பைகளைப் பக்கத்துத் தோட்டத்தில் வீசுகின்றனர். இல்லை என்றால் நெடுஞ்சாலையில் போடுவார்கள். அதன் மூலம் தங்கள் குழந்தைகளின் உயிரும், தாங்களும் பாதுகாக்கப்படும் என்று நினைக்கிறார்கள்.
டெங்கு நுளம்பு உட்பட அனைத்து தொற்றுநோய்களுக்கும் எதிராக ஒரு சிறந்த நடவடிக்கையை அணிதிரட்ட வேண்டிய முக்கியமான நேரம் இது. புரியவில்லையென்றால் கல்லறையை நோக்கி அணிவகுத்துச் செல்வீர்கள்.
3 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago