R.Tharaniya / 2025 மார்ச் 24 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக காசநோய் தினம் இன்றாகும் (மார்ச் 24) இன்றைய தினத்தில் உலகளாவிய ரீதியில் பல்வேறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில், “ஆம், காசநோயை முடிவுக்குக் கொண்டுவர முடியும். உறுதியளிப்போம்,
முதலீடு செய்வோம், சேவை செய்வோம்" என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது.இலங்கையை பொறுத்தவரையில், 2024இல் 9,180 காசநோயாயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 93 சதவீதமானோர் புதிதாகக் கண்டறியப்பட்டவர்கள் என்றும் காசநோய் கட்டப்பாட்டுக்கும், முகாமை செய்வதற்கும் தேசிய காசநோய் மற்றும் இருதய நோய்கள் கட்டப்பாட்டு நிகழ்ச்சி திட்டம் கூறுகின்றது.
முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 75 சதவீதமானோர் நுரையீரல் காசநோய் நோயாளிகள் என்றும், அவர்களில் 60 சதவீதமானோர் சளியில் கிருமிகளைக் கொண்ட நோயாளிகள் என்றும் இந்த திட்டம் சுட்டிக்காட்டுகிறது.
இதற்கிடையில், காசநோய் இறப்புகள் குறித்த நாட்டில் கிடைக்கும் சமீபத்திய தரவுகளான 2023ஆம் ஆண்டு அறிக்கையின்படி, அந்த ஆண்டு 733 பேர் இறந்தனர். இது அனைத்து நோயாளிகளிலும் 7.9 சதவீதமாகும் 55 வயதுக்கு மேற்பட்ட வயதினரிடையே காசநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிகிச்சைக்காகத் தாமதமாக வழங்குவதும், பிற இணை நோய்கள் இருப்பதும் பெரும்பாலான காசநோய் இறப்புகளுக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், ஒரு காசநோயாளியிடமிருந்து ஒரு வருடத்திற்குள் 15 ஆரோக்கியமானவர்களுக்கு காசநோய் பரவக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காசநோயாளிகளில் 45 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். இவற்றில் 25 சதவீதமானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளன, மேலும் அந்த நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு மாநகர சபை எல்லைகளிலிருந்து பதிவாகியுள்ளனர். மேலும், கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் கண்டி போன்ற மாவட்டங்களிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகி உள்ளது.
நாட்டில் கணிக்கப்பட்ட மற்றும் அடையாளம் காணப்படவுள்ள காசநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 14,000 என்றும், ஆனால் சுமார் 9,500 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது தெரியவருகின்றது.
அதன்படி, தவறவிடப்பட்ட நோயாளிகளில் 15 சதவீதமானோர் குழந்தைகள் என்றும், சுமார் 25 சதவீதமானோர்65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும், வேலை செய்யும் நபர்களில் சுமார் 41 சதவீதம் 45-64 வயதுக்குட்பட்டவர்கள்.
காசநோய் தொற்றாமல் இருக்க, முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அத்துடன், ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால், அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று, மருத்து உதவிகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். இல்லையேல், காசநோய் தொற்றில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வது கடினமாகும் என்பதே எமது அவதானிப்பாகும்.
2025.03.24
28 minute ago
39 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
39 minute ago
46 minute ago
1 hours ago