2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

சுன்னாகம் சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை அவசியம்

Janu   / 2024 நவம்பர் 13 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது, ​​பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர், அந்த நபரின்கடந்த காலத்தை ஆராய்வார்கள். அடுத்து, அந்த நபரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் கடந்த காலமும் பார்க்கப்படுகிறது. இது வளர்ந்த நாடுகளால் தற்போது தூக்கி எறியப்பட்ட ஒரு பாரம்பரியமாகிவிட்டது.

எனினும் நமது நாட்டில் இன்னுமிருக்கிறது. உங்கள் தந்தை அல்லது தாத்தா அல்லது பெரியப்பா ஒரு குற்றத்தில் ஈடுபட்டாரா? என விண்ணப்பத்தில் ஒரு கேள்வியிருக்கும். அந்த கேள்விக்களுக்கு ஆம்​ என பதிலளித்திருந்தால், பொலிஸில் வேலைவாய்ப்பு கிடைக்காது. எனினும், சுன்னாகம் பொலிஸார் நடந்துகொண்ட விதத்தை பார்க்குமிடத்து, மயிர்கூச்செறிய செய்கின்றது.

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி , இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்துவதாக, சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காணொளிகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.   விசாரணைகளுக்காக அழைத்துச்செல்லப்பட்டவர்கள் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்காமலே போன காலமும் உண்டு.நாங்கள் அழைத்துச் செல்லவே இல்லையென, பொலிஸாரும், படைத்தரப்பினரும் கையை விரித்துவிடுவார்கள். உறவினர்களை இழந்தவர்கள் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

எனினும், இந்த யுகத்தில் அவற்றுக்கெல்லாம் இடமில்லை. சம்​பவமொன்று இடம்பெற்ற உடனேயே கையிலிருக்கும் அலைபேசியை எடுத்துக்கொள்வோர், ஆரம்பம் முதல் இறுதி வரையிலும் ஒலி, ஒளிப்பதிவு செய்துவிடுகின்றனர். ஆகையால், எந்தத் தரப்பாக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பமுடியாது. அதற்கு அமுல்படுத்தவேண்டும்.

புதிய ஜனாதிபதி அனுரகுமா​ை திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் பொலிஸ் அராஜகத்தையே வடக்கில் முன்னெடுக்கிறது. என்ற குற்றச்சாட்டு, சுன்னாகம் சம்பவத்துக்குப் பின்னர் மு​ன்வைக்கப்பட்டுள்ளது. ஆக, அவ்வாறு இல்லை, சகலருக்கும் சமமான நீதியே உள்ளது என்பதை நிரூபிக்கவேண்டும். அத்துடன், குற்றமிழைத்தவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்கவேண்டும்.

பொலிஸ் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பான சட்டம் மிகவும் பழமையானது. எந்த வகையிலும் நவீனமாக இல்லை. பல பொலிஸ்  நிலையங்களில் கணினிகள் இல்லை, சில பொலிஸ் நிலையங்களில், புகார்களை தட்டச்சுப்பொறிகளில் தட்டச்சு செய்கிறார்கள். உள்கட்டமைப்பு வசதிகளில் நமது பொலிஸ் எந்த நவீன நிலையை அடையவில்லை.

நமது நாட்டில் பொலிஸாரினால் இவ்வாறு அடாவடித்தனமாக நடந்துகொண்டமை இது முதன்முறையல்ல. எனினும், புதிய அரசாங்கத்துக்கு இவ்வாறான சம்பவங்கள் இழுக்கை ஏற்படுத்தும், சிறுபான்மை இனங்களை, குறிப்பாக, வடக்கில், தமிழர்களை பொலிஸார், அடாவடித்தனமாக நடத்துக்கின்றனர் என்ற படத்தை காண்பித்துவிடும் என்பதால், அரசாங்கம் மிகக் கவனமாக இந்த விடயத்தை கையாளவேண்டும்.

இலங்கையின் தண்டனைச் சட்டம் மிகவும் பழமையானது. மேலும், பாதுகாப்புப் படையினரைப் பாதிக்கும் கட்டளைகளும் மிகவும் பழமையானவை. இவை தொட்டவுடன் இரண்டாக உடையும் அளவுக்கு உடையக்கூடியவை. அதன் காரணமாக மக்களுக்கு நடக்கக்கூடிய அநீதியும் துஷ்பிரயோகமும் பெரிது. ஆகையால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அரசாங்கம் அதிரடியான நடவடிக்கைகைளை எடுப்பது அவசியமாகும்.

2024.11.13


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X