Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 17 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் வெளியான 2024/2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளில், வடக்கு மாகாணம் தவிர மற்ற அனைத்து மாகாணங்களும் சாதாரண தரப் பரீட்சையில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளன.
முக்கியமான பரீட்சைகளின் பெறுபேறுகளை ஏனைய மாகாணங்களுடன் கடந்தகாலங்களில் ஒப்பிடும் போது, வடக்கு மாகாணமே முதலில் நிற்கும். எனினும், இம்முறை வெளியான கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுடன் ஒப்பிடும்போது கடுமையான பின்னடைவை
வடமாகாண சந்தித்துள்ளது.
ஏனைய மாகாணங்களின் பெறுபேறுகளை ஒப்பிடும் போது, இது மிகவும் நல்ல கல்வி முன்னேற்றம். கணிதம் மற்றும் அறிவியலில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதமும் எழுபது சதவீதத்தைத் தாண்டியுள்ளது. கல்வித் துறையில் இந்த நேர்மறையான முன்னேற்றத்தை அடைவதில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் செயல்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் முக்கியமானவையாகும்.
பெறுபேறுகளை நேர்மறையான அர்த்தத்தில் படித்தால், 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இது 73.45 சதவீதமாகும். ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 13,392. இது சதவீத அடிப்படையில்
4.15 சதவீதமாகும். 2.34% பரீட்சார்த்திகள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை,
உயர்தரத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்கள் கல்வித் துறையில் முன்னேறியிருந்தாலும், உயர்தரத்துக்குத் தகுதி பெறாத மாணவர்களுக்கு சில குறிப்பிட்ட வழிகாட்டுதல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏனென்றால், தற்போதுள்ள கல்வி முறையின் பக்க விளைவு காரணமாக அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
உயர்தரத்தில் கல்விப்பயிலுவதற்காக போதியளவில் பெறுபேறுகள் கிடைக்காத மாணவர்களில் பலர், தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்வதற்கும் முயற்சித்துள்ளனர். இது தவறான முடிவாகும்.
எந்தவொரு தோல்விக்கும் தன்னுயிரை மாய்த்தல் தீர்வாகாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதற்காக ஒவ்வொரு பரீட்சைகளின் போது மட்டுமன்றி, விளையாட்டு மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களில் தோல்வியடையும் போது, தட்டிக்கொடுக்கவேண்டும்.
அதனூடாக, தோல்விகளை தாங்கிக்கொள்ளும் மனப்பான்மையையும் வளர்க்கவேண்டும். வெற்றிகளை பெறும்போது தட்டிக்கொடுக்கும்பெற்றோர், தோல்வியடையும் போது, மன ஆறுதல் சொல்லி தேற்றவேண்டும்.
இந்த ஏழை மக்களின் சமூக மனநிலையைப் பற்றி ஆழமாக சிந்தித்து, அவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட திட்டத்தைத் தயாரிப்பது அவசியம். வெற்றியாளர்களுக்குத் திட்டங்கள் தயாரிக்கப்படுவது போல, தோல்வியுற்றவர்களுக்கும் சில குறிப்பிட்ட திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். உயர்தரத்தில் பயில்வதற்குப் போதியளவான பெறுபேறுகள் கிடைக்காதவர்கள், ஏனைய துறைகளில் கால்வைக்க வேண்டும்.
அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், நிச்சயமற்றதாக இருக்கக்கூடாது. அவர்களும் எதிர்கால பணியாளர்களின் ஒரு பகுதியாக மாற்றப்பட வேண்டும்.
இந்தத் தோல்வியடைந்த மாணவர்கள் ஒரு தலைமுறை அறிவுஜீவிகள் என்று சொல்வது பொருத்தமற்றது. அவர்களிடம் வேறு துறைகளில் திறமைகள் இருக்கலாம். அந்தத் திறமைகளை நாம் அடையாளம் கண்டு, அந்தப் பாதையில் முன்னேறுவதற்கான நடவடிக்கைகளைத் தயாரிக்க வேண்டும்.
2 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
19 Jul 2025