2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

யானையின் வடிவத்தைத் விவரித்த குருடனின் கதையாகும்

Editorial   / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யானையின் வடிவத்தை விவரித்த குருடனின் கதையாகும்

பாதாள உலக கோஷ்டியினருக்கு இவ்வளவு ஆயுதங்கள் எங்கிருந்து கிடைத்தன? இது சமீப காலமாக அடிக்கடி பேசப்படும் தலைப்பாகும். இதற்கு, குருடன் யானையின் வடிவத்தை எப்படி விவரித்தார் என்பதை நினைவூட்டும் பதில்களே அவர்களுக்கு கிடைத்தன.

 ஆனால் கேள்வியின் ஆழத்தை அடையாளம் காணும் அளவிற்கு முழுமையான பதில் கிடைக்கவில்லை என்பது புலனாய்வாளர்களின் மிகப்பெரிய குறைபாடாகும். அத்தகைய விரிவான பதிலை உருவாக்கத் தவறியதே பிரச்சனையாகும்.

வெல்லவாய நீதிமன்றில் வழக்குப் பொருட்களான உலர் கஞ்சா மற்றும் துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நீதவான் நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்ட போது, ​​ அவர்கள் 8 துப்பாக்கிகளை திருடி வெளியாட்களுக்கு விற்றது தெரியவந்தது.

துப்பாக்கி ஒன்று இருபத்தைந்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை வாங்கிய மூவர் உட்பட ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மூன்று துப்பாக்கிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பாதாள உலக கோஷ்டியினரின் ஆரம்ப காலப்பகுதிக்குச் சென்றால், அரசியல்வாதிகளின் ஆசியுடனும் அவர்களின் பாதுகாப்புடனும் பாதாள உலகம் ஒரு மாபெரும் மரமாக வளர்கிறது. அதன்படி, ஒவ்வொருவரும் அரசியல்வாதிகளை வசைபாடிக்கொண்டே நாட்களைக் கடத்தத் தொடங்கினர். பாதாள உலகைக் கொளுத்த வேறு வழிகள் எதுவும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே பாதாள உலகக்குழுவினர் தாம் விரும்பியவாறு தமது செயற்பாடுகளை தொடர்ந்தனர்.

பாதாள உலகத்தில் ஊழல் செய்யும் சில காவல்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததும் பாதாள உலகத்திற்கு அரசியல்வாதிகள் தீனி போடுவது மட்டும் இல்லை என்பது தெரியவந்தது. போர் மூளும் போது சில இராணுவத்தினர் துப்பாக்கியுடன் இராணுவத்தை விட்டு ஓடினர். அவை பாதாள உலகத்திற்கு விற்கப்பட்டன. தப்பிச் சென்ற சில படையினர் பாதாள உலகத்தை வாழ்வதற்கு எளிதான வழியாகத் தேர்ந்தெடுத்து வாடகைக் கொலையாளிகளாக மாறினர்.

  மிக அண்மைக் காலங்களில் சில இராணுவ வீரர்கள்   இராணுவ முகாமில் இருந்து தப்பிச் சென்று, விரும்பிய இலக்கை வேட்டையாடி மீண்டும் இராணுவ முகாமுக்குத் திரும்புவதும் தெரியவந்துள்ளது.   பாதாள உலகம் எப்படி வளர்கிறது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.

வெல்லவாய நீதவான் நீதிமன்ற வழக்கில் இருந்த துப்பாக்கிகள் வெளியாட்களின் கைகளில் சிக்கிய சம்பவத்தின் மூலம், இந்த நாட்டின் பாதாள உலகம் தாம் படையெடுக்க வேண்டிய ஒவ்வொரு துறையையும் ஆக்கிரமிப்பதில் எந்தளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகின்றது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் மிகவும் ஊழல்மிக்க அதிகாரிகள் குழுவொன்று போதைப்பொருள் வியாபாரிகளுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சம்பவத்தை ஒத்ததாகும்.

 மோசடியை எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த நாடு சிகாகோவாக மாறுவதற்கு வெகு தொலைவில் உள்ளது. அப்படி ஒரு நாடு உருவானால் நாம் யாரும் பிழைக்க மாட்டோம். எனவே, பாதாள உலகத்தை அடக்குவதற்கும், அதை ஊக்குவிக்கும் அனைத்து துணைப்பிரிவுகள் உட்பட முழு வளையத்தையும் துடைப்பதற்கு நடவடிக்கை அவசியம் 17.04.2024


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .