Janu / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீவுப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தாழ்வான பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பலர் தங்கள் வீடுகளை கூட இழந்துள்ளனர், பல மனித உயிர்களைப் பறித்துள்ளன. வெள்ளத்தால் குடிசைகள் மற்றும் வீடுகள் பகுதியளவும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. வெள்ளம் மெல்ல வடிந்தாலும் அதன் பக்கவிளைவுகள் அதிகமாகும்.
வெள்ளம் வடிந்ததும் தொற்று நோய்கள் மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளது. வெள்ளத்தால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெள்ளம் காரணமாக சுற்றுச்சூழல் நீர் மாசுபாட்டை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளை நாம் அறிந்திருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல், நீர் மாசுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன, ஆனால் குறிப்பாக மனித மற்றும் விலங்குகளின் கழிவுகள் சிறுநீர், வெள்ளத்தில் கலந்த இரசாயனங்கள், இறந்த விலங்குகளின் உடல் பாகங்கள், புழுக்கள் மற்றும் பாம்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிப்பது பெரும் பேரழிவுகள் ஆகும். இதில் ஏராளமான ரசாயனங்கள் கலந்திருப்பதாலும், கழிவறைகளில் வழிந்தோடும் நச்சுத் தண்ணீராலும் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதன்காரணமாக அசுத்தமான நீரில் தங்கி அந்த நீரால் உடல் மற்றும் கைகால்களை கழுவுதல் கூடாது.
மஞ்சள் காமாலை பற்றிய விழிப்புணர்வை ஒரு நோயாளிக்கு தேவையான ஆலோசனை மற்றும் நடத்தை பற்றி மருத்துவரிடம் கூறுவதன் மூலமும் அறியலாம். மருத்துவ ஆலோசனைப்படி செயல்பட்டால் நோய் குணமாகும். ஆனால், மழையுடன் ஏற்படும் வெள்ளத்தால் சுகாதாரக்கேடால், ஏற்படும் மற்றொரு நோய் காய்ச்சல். இது அசுத்தமான மற்றும் நச்சு நீர் மூலம் பரவுகிறது. எனவே, குழந்தைக்கோ அல்லது பெரியவர்களுக்கோ காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் நோய் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதன் மூலம் நிலைமையைப் புரிந்து கொள்ளலாம். மழையால் ஏற்படும் மற்றொரு ஆபத்தான நோய் எலிக்காய்ச்சல் ஆகும்,
பாக்டீரியா உடலில் நுழைந்த இரண்டு முதல் இருபத்தி ஒரு நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றும். அதிக காய்ச்சல், தசை வலி, தலைவலி. கண் சிவத்தல், சிறுநீர் கழித்தல் குறைதல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மயக்கம் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள் தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
இரத்தினபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,882 லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனார். இது இந்த ஆண்டு நோயினால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் குறிக்கிறது.
எலிக்காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சிறுநீரகம், இதயம் மற்றும் மூளை ஆகிய உறுப்புகள் செயலிழந்து மரணம் கூட ஏற்படலாம் எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2023 இல், 1,400 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இருந்தன, 2024 இல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவை மட்டுமன்றி வயிற்றுப்போக்கு என்பது மலம் மற்றும் சிறுநீர் கலந்த அசுத்தமான நீரைக் குடிப்பதாலும், அசுத்தமான உணவை உண்பதாலும் ஏற்படும் பொதுவான நோயாகும். வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வயிற்றுப்போக்கு மிகவும் பொதுவானது. ஆகையால், வௌ்ளத்துக்குப் பின்னர் சுகாதார நடைமுறைகளை மிகக்கவனமாக கையாளவேண்டும்.
2024.11.28
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025