2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

அலங்கார உற்சவம்...

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

"ஈழத்து பழனி"என அழைக்கப்படும் கிழக்கின்  சித்தாண்டி இலுக்குப் பொத்தானை வேலோடு மலை முருகன் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவம் சனிக்கிழமை (5)   கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .

ஆலய பரிபாலன சபைத் தலைவர் சுப்பிரமணியம் தியாகராஜா தலைமையில்  மகோற்சவ கால குரு சிவஸ்ரீ சுபா பாஸ்கர குருக்கள் கிரியைகளை ஆரம்பித்து வைத்தார். ராமகிருஷ்ண மிஷன் மட்டு. மாநில உப தலைவர் ஸ்ரீமத் உமாதீஷானந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பித்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

கொடியேற்றத் திருவிழாவுக்காக சித்தாண்டி மக்கள் சித்தாண்டிலியிருந்து 14 கிலோமீட்டர் தூரம் பாத யாத்திரையாக வேலோடு மலையை வந்தடைந்தனர்.நடுவில் சந்தனமடு ஆற்றைக் கடந்து அவர்கள் சென்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவ அத்துடன் அலங்கார உற்சவம் நிறைவடைய இருக்கின்றது என ஆலய பரிபாலன சபையின் தலைவர் சு.தியாகராஜா தெரிவித்தார்.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X