2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

சந்தான ஈஸ்வரர் ஆலய கொடியேற்றம்...

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை மாநகர்வளர்கௌரிஅம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான  வருடாந்த மகோற்சவத் திருவிழாவின்  கொடியேற்றம்,செவ்வாய்கிழமை  (01)  சுப முகூர்த்த வேளையில் சிறப்பாக நடைபெற்றது .

கொடியேற்றத்திருவிழா , மகோற்சவ பிரதம குருவான யாழ்ப்பாணம் வாமதேவசிவாச்சாரியார் சிவஸ்ரீ சி.குககணேசக் குருக்கள்,  ஆலய பிரதமகுருசிவஸ்ரீ ஸ்ரீராமச்சந்திர தவசீலக் குருக்கள் முன்னிலையில் ஏனைய சிவாச்சாரியார்கள் சகிதம் நடாத்தினார்.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது இம் மகோற்சவம் தொடர்ந்து பத்து நாட்கள்  நடைபெற்று11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேரோட்டம் இடம் பெற்று மறுநாள் 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை தீர்தோற்சவ அத்துடன் நிறைவடையும் என்று ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் வேலாயுதபிள்ளை செவ்வேட்குமரன்  தெரிவித்தார் .கொடியேற்றத் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 வி.ரி. சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .