2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

பாற்குட பவனி

Freelancer   / 2023 ஏப்ரல் 30 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 காரைதீவு நிருபர் சகா

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை  மடத்தடி  ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் முதலாவது வருடாந்த அலங்கார உற்சவத்தின்  பாற்குட பவனி நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்துக்கு மேற்கு புறமாக உள்ள சிவன் ஆலயத்தில்யத்து பாற்குடபவனி ஆரம்பமானது.

முன்னே ஆலய பரிபாலன சபை தலைவர் கி. ஜெயசிறில் பிரதான கும்பம் தாங்க, ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா பிரதான மடை தாங்க ,ஆலய குரு சிவஸ்ரீ ச. கோவர்த்தனசர்மா வழிகாட்டலில் பாற்குடபவனி சிறப்பாக நடைபெற்றது.

உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள்  தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா சமுகத்தில் வருஷாபிஷேக கிரியைகள் நடைபெற்று வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .