Editorial / 2020 ஜூலை 14 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயப் பங்கின் துணை ஆலயமாகிய தூய குழந்தை இயேசு தேவாலயத் திருவிழா திருப்பலி, இன்று (14) காலை 6.15 மணிக்கு, பள்ளிமுனை பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாசன் சீமான் அடிகளார் தலைமையில், கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலி நிறைவில் குழந்தை இயேசுவின் திருச்சுரூப ஆசீர்வாதமும் இடம் பெற்றது.
இந்தத் திருப்பலியில் பேராலயப் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், உதவிப் பங்குத்தந்தையர்களான அருட்பணி. ஜெஸ்மன்ராஜ், அருட்பணி. சதாஸ்கர், மன்னார் மடு மாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி. கிறிஸ்து நேசரெட்ணம், உதவி அதிபர் அருட்பணி. தயாளன் கூஞ்ஞ, வின்சென்சியன் சபைக் குருக்களும், டிலாசால் அருட் சகோதரரும், திருக்குடும்ப, பிரான்சிஸ்கன் மற்றும் யோசெவ்வாஸ் அருட் சகோதரிகளும் கலந்துசிறப்பித்தனர்.



10 minute ago
25 minute ago
36 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
36 minute ago
40 minute ago