2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

மார்கழி திருவாதிரை நடை பஜனை ...

Janu   / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாண தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் நடத்தப்படும் மார்கழி திருவாதிரை  நடை பஜனை, வெள்ளிக்கிழமை (02) அன்று காலை 6.30 மணிக்கு கொட்டாஞ்சேனை மத்திய இந்து வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகி கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப  தலைவர் சி.தனபாலா கலந்து கொள்ளவுள்ளதோடு பாடசாலை மாணவர்கள் ,அறநெறி பாடசாலை மாணவர்கள் ,சைவ சமய ஆர்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதில் பங்கேற்கும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதற்கான ஒழுங்குகளை மன்ற பொதுச்  செயலாளர்  எஸ்,கே. தளையரட்ணம் மேற்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X