Mayu / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைதீவு மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவம் பக்திப் பூர்வமாக நடைபெற்று வருகின்றது. மகோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று (28) செவ்வாய்க்கிழமை, ஆலய வரலாற்றிலேயே முதற் தடவையாக மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில், ஆலய குரு சிவஸ்ரீ কৃষ্ণ பிரியதர்ஷன் குருக்கள் முன்னிலையில், உதவிக்குரு பிரம்மஸ்ரீ பிரபாத் சர்மா உதவியுடன் இந்தத் திருமாங்கல்ய தாரண நிகழ்வு பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது.

ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அம்மனின் திருமாங்கல்ய தாரணம் நடைபெறுவதற்கு முன்பதாக, மாங்கல்யம் ஆலயத்தில் கூடியிருந்த அனைத்து பக்தர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் வழங்கப்பட்டது.

ஆலய பரிபாலன சபை தலைவர் கி.ஜெயசிறில், ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட நிருவாக சபையினர் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உற்சாகக் கொண்டாட்டம்: மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடிக்க, பக்திப் பெருக்குடன் கூடிய குரவை ஒலியின் மத்தியில் அம்மனின் கழுத்தில் திருமாங்கல்யம் ஏறியது.
திருக்கல்யாண வைபவத்தின் இறுதியில், கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் திருமாங்கல்ய இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
வி.ரி.சகாதேவராஜா
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago