2025 மே 12, திங்கட்கிழமை

முத்தேர் பவனி...

R.Tharaniya   / 2025 மே 11 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க சிறப்பாக நடைபெற்றது.
 
நுவரெலியா  மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு முத்தேர் திருவிழா மேளதாள இசை முழங்க, பக்த அடியார்களின் அரகொரா பக்தி பரவசத்துடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
 
குறித்த தேர் பவனி ஆலயத்தில் நடைபெற்ற திரவிய அபிசேகம் வசந்த மண்டப பூஜை உள் வீதி உலா வருதல் ஆகியன இடம்பெற்று தேர் திருவிழா ஆரம்பமானது.
 
இந்த தேர் பவனி ஹட்டன் மல்லியைப்பூ சந்தி வரை சென்று மீண்டும் திரும்பி ஹட்டன் புறநகர் வழியாக எம்.ஆர்.டவுன் வரை சென்று பிரதான வீதியூடாக இன்று ஆலயத்தினை வந்தடைந்தது.
 
கடந்த 02 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான சித்திரா பௌரணமி தேர் திருவிழா, நேற்று முன்தினம் கங்கை நீர் எடுத்தல் வேட்டை திருவிழா ஆகியன இடம்பெற்று நேற்று தேர் பவனி ஆரம்பமானது, 12 ம் திகதி பால்குட பவனியும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த தேர் திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருவதுடன் கலை கலாசார நிகழ்வுகள் நடன நாட்டிய நிகழ்வுகள் அன்னதான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

எஸ்.கணேசன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X