Janu / 2026 ஏப்ரல் 28 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர், மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா தற்போது மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
உற்சவகால பிரதம குரு 'வித்யா பிரவீணா' சிவஸ்ரீ அ. மு. நிஷாந்தன் குருக்கள் தலைமையில், ஆலயக் குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்களின் முன்னிலையில் வருடாபிஷேகக் கிரியைகள் பக்திப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன.
தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் பகல் நேர அலங்கார உற்சவத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் மே மாதம் 01-ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவடையவுள்ளது.
இந்தப்பத்து நாள் அலங்கார உற்சவத் திருவிழாக் காலங்களில், தினமும் காலை 10:00 மணிக்குக் கும்ப பூஜையுடன் வழிபாடுகள் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து, பகல் 1:00 மணிக்கு அலங்கார உற்சவப் பிரதான பூஜையும், அம்பாளின் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவும் இடம்பெறும். உற்சவ காலங்களில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என ஆலயப் பரிபாலன சபை அறிவித்துள்ளது.
வி. ரி. சகாதேவராஜா












39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago