Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஒக்டோபர் 29 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
100 கோடி கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க இந்தியாவின் ஆத்மநிர்பதா எவ்வாறு உதவியது என்பதுபற்றி தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழவின் கொவிட்-19 பணிக்குழு தலைவர் என்.கே. அரோரா எழுதுவதைப் பார்க்கலாம்
10 மாதங்களுக்குள் 100 கோடி தடுப்பூசி வழங்குவது என்பது நம்மைப்போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாகும். தடுப்பூசி ஆத்மநிர்பதா, இந்தியா இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்த உதவியது.
இந்த ஆண்டு இறுதிக்குள் வயதுவந்தோர் 94 கோடி பேருக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. விஞ்ஞானிகள், தொழில்துறையினர். நிர்வாகிகள் மற்றும் அரசாங்கத்தின் முயற்சியாலேயே இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை சாத்தியமானது.
விஞ்ஞானிகள், தொழில்துறை தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் ஓத்துழைப்பினாலேயே இது சாத்தியமானது.
அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி கட்டமைப்பை வலுப்படுத்த கடந்த இரண்டு தசாப்தங்களில் நாடு படிப்படியான முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்தது. தடுப்பூசிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்தது. 2020 மார்ச் மாதம் தொற்றுநோய் உலகைத் தாக்கியபோது இந்தியா ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பை உருவாக்குவதற்கு பாரிய அளவிலான நிதியை முதலீடு செய்தது. குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை அபிவிருத்தி செய்யும் சவால்களை ஏற்க அது உதவிபுரிந்தது.
ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன: அதிக ஆபத்துள்ள திட்டங்களில் முக்கிய முதலீடுகள் செய்யப்பட்டன. கல்வித்துறைக்கும், தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஊக்கமளித்தது. தடுப்பூசி அபிவிருத்திக்கு ஆதரவான உட்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் ஏற்கனவே இருந்த தடுப்பூசி உற்பத்தி உட்கட்டமைப்பு கைக்கு வந்தது. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஒரு வருடத்துக்குள் ஆரம்பமானது. தற்பொழுது நான்கு வகை தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. அவை பாரத் பயோடெக்ஸினின் கோவாக்ஸின், சேரம் இன்ஸ்டிடிய¬10ட்டின் கொவிஸீல்ட், காடியா ஸைடஸின் ஸைகோவ் டி, மற்றும் ரஷ்ய அபிவிருத்தி ஸ்புட்னிக் வி என்பனவாகும்.
தடுப்பூசிகள் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு அவசரகால நிலைமைகளின்போது பயன்படுத்தப்பட்டதிலிருந்து மக்கள் அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தொடர்பில் அச்சமடைந்திருந்தனர். ஆனால் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஜூன்-ஜூலை 2020 இல் தடுப்பூசிகளின் சாத்தியமான பக்க விளைவுகளைப்பற்றி விவாதிக்கத் தொடங்கினர் என்பது அதிகம் அறியப்படவில்லை.
கடந்த வருடம் செப்டெம்மர், ஒக்டோபர் மாதங்களில் இந்தியா ஒரு நிபுணர் குழுவை ஏற்படுத்தியது. அக்குழவில் நுரையீரல், இருதயநோய், நரம்பியல் நோய் நிபுணர்கள் மற்றும் ஹெப்படொலொஜிஸ்ட் (கல்லீரல், பித்தப் பை, பித்த மரம், கணையம் மற்றும் அவற்றின் கோளாறுகளை நிர்வகித்தல் மற்றும் ஆய்வை உள்ளடக்கியது) ஆகிய விஷேட மருத்துவ நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் தேசிய அளவில் கண்காணிப்புக்களை நடத்தினர்.
இவர்களில் அநேகர் பொதுவான பாதக நிகழ்வுகள் மற்றும் புதிய தடுப்பூசி மூலம் ஏற்படக்கூடிய மாறுபாடுகள்பற்றி அறியவும் தகுந்த சிகிச்சையளிக்கவும் பயிற்சி பெற்றிருந்தனர்
ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும், தடுப்பூசி போட்ட பிறகு 30 நிமிடங்களுக்கு மக்களை கண்காணிக்கக்கூடிய காத்திருப்புப் பகுதி அமைக்கப்பட்டது எந்தவொரு கடுமையான எதிர்வினையையும் உடனடியாக நிர்வகித்தல் மற்றும் அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு அவர்களை அனுப்புவதே இதன் நோக்கமாகும். இந்த அணுகுமுறை பல நூறு உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை எதிர்கொள்ளும் வகையில் சமூக ஊடகங்கள் முறையாக ஸ்கேன் செய்யப்பட்டன.
ஒரு தொற்று நோயைப் போலவே, தடுப்பூசி தயக்கமும் உடனடி நடவடிக்கை இல்லாவிட்டால் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வேகமாகப் பரவும். செயலூக்கமான அணுகுமுறை தயக்கத்தை தடுப்பூசி ஆர்வமாக மாற்றியுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி பிரசாரம் சுகாதாரத் துறைகளைத் தவிர வேறு பல துறைகளை உள்ளடக்கிய நன்கு ஒருங்கிணைந்த செயல்பாடாகும்.
இந்தியா ஒரே நாளில் 2 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான திட்டத்திற்கான உட்கட்டமைப்பு குறுகிய காலத்தில் வராது. கொவிட் தடுப்பூசிகள் உலகில் எங்கும் வரம்பற்ற அளவில் கிடைத்ததில்லை. உள்நாட்டு தடுப்பூசிகளை உருவாக்கவும், சர்வதேச அங்கீகாரத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், 2020 இன் பிற்பகுதியில் சர்வதேச தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நூறுகோடி பேருக்கு தடுப்பூசி என்பது ஒரு மைல் கல் ஆகும். ஆனால் கொவிட் நோயைக் கட்டுப்படுத்த இன்னும் நீண்ட பாதை உள்ளதென்பதே உண்மை. ஆனால் கணிசமான எண்ணிக்கையிலான வயது வந்தோர் மற்றும் எல்லா பிள்ளைகளுக்கும் தடுப்பூசி ஏற்றவேண்டியுள்ளது.
கொவிட் நோய்த் தடுப்பு மக்களை கடுமையான நோய்களிலிருந்தும், கொவிட் மரணங்களிலிருந்தும் பாதுகாக்க நீண்ட தூரம் செல்லும். மக்களின் இணக்கமே முக்கியமானது. ஏதேனும் புதிய மாறுபாடுகள் எதிர்காலங்களில் ஏற்படுவதைக் கண்காணிக்கவும் எதிர்காலத்தில் ஏற்படும் இத்தகைய பாதிப்புக்களை தவிர்க்கவும் சுகாதார அமைப்பை தயார்படுத்துவதும் கொவிட் சவாலில் வெற்றி பெறுவதும் முக்கியம்.
ஆத்மநிர்பதா தடுப்பூசியின் மேலோட்ட தத்துவம் முன்னோக்கிச்செல்லும் பணிகளைச்செய்ய திறவுகோலாக இருக்கும்.
58 minute ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
8 hours ago