2026 மார்ச் 07, சனிக்கிழமை

176 தொகுதிகளில் தி.மு.க., போட்டி?

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை :

தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, 25; ம.தி.மு.க., - வி.சி., - இந்திய கம்யூ., கட்சிகளுக்கு, தலா, 6; முஸ்லிம் லீக், 3 ; மனிதநேய மக்கள் கட்சி, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 6 அல்லது, 7 தொகுதிகள் கொடுக்கப்படலாம். மேலும், கொ.ம.தே.க., 2; தமிழக வாழ்வுரிமை கட்சி, 1 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. இவை போக, மீதமுள்ள, 176 தொகுதிகளில், தி.மு.க.,வினர் களமிறங்கலாம் என தெரிகிறது. இதில், ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - த.வா.க., கட்சிகள், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளன. இவற்றையும் சேர்த்தால், 185 தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில், வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர்.

தி.மு.க., ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பது குறித்து விவாதிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநிலக் குழு கூட்டம், நேற்று நடந்தது. மாநில செயலர் பாலகிருஷ்ணன், வெங்கடேசன் எம்.பி., உள்ளிட்ட, 95 பேர் பங்கேற்றனர்.

பின், நிருபர்களிடம், பாலகிருஷ்ணன் கூறுகையில், ''தொகுதி பங்கீடு தொடர்பாக, நாங்கள் மட்டும் முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் கட்சி பலத்துக்கு ஏற்ப, தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என, தி.மு.க.,விடம் கூறியுள்ளோம்,'' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .