2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

34 படிகளை 4 நிமிடத்தில் ஏறிய 11 மாத சிசு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருதுநகர் சுலோச்சனா தெருவைச் சேர்ந்த  ஒரு தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். அவர்கள் 11 மாதங்களே ஆன கைலன் பார்த்தசாரதி, அதியன் பார்த்தசாரதி. இதில் அதியன் பார்த்தசாரதி எப்போதும் துருதுரு குழந்தையாக வளர்ந்து வந்துள்ளான். இதனால்   அதியன் பார்த்தசாரதி மீது அதிக கவனம் செலுத்தி வந்தனர். முதல் மாடியில் வசித்து வரும் இவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி வீட்டை எப்போதும் பூட்டியே வைத்துள்ளனர்.

இதற்கிடையே மகேஸ்வரன் வேலைக்கு செல்லும் போது பின்தொடர்ந்து வேகமாக தவழ்ந்து வரும் இளைய மகன் அதியன் பார்த்தசாரதிக்கு பலகையால் தடுப்பு போட்ட பின்னரே அவர் புறப்பட்டு செல்வார். இரட்டை குழந்தைகளுக்கு 10 மாதங்கள் ஆன நிலையில் அதியன் பார்த்தசாரதி தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, வேகமாக தவழ்ந்து சென்று தடுமாறி விழுவதும் வாடிக்கையாக இருந்தது.

இந் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த குழந்தை வீட்டின் 2-வது மாடிக்கு ஏற முயன்றுள்ளான். முதலில் தடுத்த பெற்றோர் அவனது தைரியத்திற்கு ஊக்கம் கொடுத்தனர். அதன் பயனாக 34 படிகளை 10 மாத குழந்தை அசாதாரணமாக 4 நிமிடங்களில் ஏறியது. இதனை வீடியோவாக பதிவு செய்த குழந்தையின் பெற்றோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அத்துடன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சியிலும் இறங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X