2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

3வது புவி சுற்று வட்டப்பாதைக்குள் ஆதித்யா எல்-1

Freelancer   / 2023 செப்டெம்பர் 10 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் திகதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் திகதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும், அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.. இந்நிலையில், சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 3வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X