2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

4 வருடங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட இடுக்கி அணை

Freelancer   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இடுக்கி அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் முதற்கட்டமாக வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படலாம் என்றும் பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்‍கி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்‍கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது. 
  
இடுக்‍கி அணை திறக்‍கப்பட்டதையடுத்து இடுக்‍கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக விவசாய நிலங்கள், ரப்பர் தோட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .