2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

5 மாத கர்ப்பிணி ஆசிரியரைத் தாக்கிய மாணவர்கள்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 04 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து மாத கர்ப்பிணி ஆசிரியை ஒருவர்,  மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அசாமில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாமின் திப்ருகார் மாவட்டத்தில்  உள்ள பாடசாலையொன்றிலேயே கடந்த 27 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று மாலை குறித்த  பாடசாலையில்  பெற்றோர் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இக் கூட்டத்தின் போது குறித்த  ஆசிரியை,  மாணவர் ஒருவரின்  மோசமான கல்வித் திறனை குறித்துஅவரது  பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குறித்த மாணவன் கூட்டம் முடிவடைந்த பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குறித்த  ஆசிரியையைத் தள்ளி ,அவரது தலைமுடியை பிடித்து இழுத்து அவரைத் தாக்கியுள்ளனர்.

இதனை சற்றும் எதிர் பாராத ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகள்   குறித்த மாணவர்களின் தாக்குதல்களில் இருந்து அவரைக் காப்பாற்றி வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். இத் தாக்குதலில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் 22 மாணவர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்த விசாரணையைப் பாடசாலை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .