2025 ஜூலை 23, புதன்கிழமை

580 கிலோகிராம் கஞ்சாவை உட்கொண்ட எலிகள்;பொலிஸார் குற்றச்சாட்டு

Ilango Bharathy   / 2022 நவம்பர் 28 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

”பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த 580 கிலோ கிராம்  கஞ்சாவை எலிகள்  உட்கொண்டுள்ளதாக” பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ள விநோத சம்பவம் உத்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

 உத்திர பிரதேசத்தின் மதுரா நகரத்தில் உள்ள, ஹைவே மற்றும் ஷேர்கர் ஆகிய இரண்டு பொலிஸ் நிலையங்களிலும் வைக்கப்பட்டிருந்த  சுமார் 60 லட்சம் மதிப்பிலான கஞ்சாப் பொதிகளையே இவ்வாறு எலிகள் உட்கொண்டு விட்டதாக மதுரா நீதிமன்றத்தில் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி கஞ்சாப் பொதிகளை எலிகள் தான் உட்கொண்டுள்ளன என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுமாறு கேட்டுள்ளார்.

இதற்குப் பொலிஸார் தரப்பில் முறையான பதில் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி  " எலிகள்தான் கஞ்சாப் பொதிகளை உட்கொண்டு விட்டன என்ற கதையை வேறு எங்கேயாவது போய் கூறுங்கள், இன்னும் ஒரு வாரத்துக்குள் காணாமல் போன கஞ்சா மூட்டைகள் நீதிமன்றத்துக்கு வர வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு" எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு காணாமல் போன பொருட்களுக்கு எலி மீது பழிபோடுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னர்  பீகாரில் பொலிஸார் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான லீற்றர் சாராயத்தை எலிகள் குடித்துவிட்டதாக பொலிஸார்  தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது, 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .