2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

8 பில். டொலர்களை நெருங்குகிறது இந்திய-இஸ்ரேல் வர்த்தகம்

Freelancer   / 2022 டிசெம்பர் 27 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா மற்றும் இஸ்ரேலின் இருதரப்பு வர்த்தகம் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அருகில் உள்ளது என்றும் இந்த எண்ணிக்கையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் கூறினார்.

30 ஆண்டுகளுக்கு முன்பே இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்ததாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகம் இருப்பதாகவும் கிலோன் கூறினார்.

இந்தியாவில் முதலீடுகள் குறித்து பேசிய கிலோன், கிட்டத்தட்ட 300 இஸ்ரேலிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாகவும் புனேவில், Amdocs இஸ்ரேலிய நிறுவனம் 14,000 இந்திய ஊழியர்களுடன் மிகப்பெரிய இஸ்ரேலிய நிறுவனமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு நட்பு மற்றும் நல்ல உறவுமுறையில் உள்ளது.  2018 ஜூவை மாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குச் சென்றார், இது ஒரு இந்திய அரசாங்கத் தலைவரின் முதல் பயணமாகும். இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி மோஷே ஹோல்ஸ்பெர்க்கை சந்தித்து பேசினார். 

ஜனவரி 2019 இல், அப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹோல்ஸ்பெர்க் மற்றும் சாமுவேல் ஆகியோர் மும்பைக்கு விஜயம் செய்ததாக தி ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில், இந்தியா இப்போது இஸ்ரேலிய இராணுவ உபகரணங்களை அதிகம் வாங்கும் நாடாக உள்ளது, இந்தியாவுக்கான ஏற்றுமதிகள் இஸ்ரேலின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 46 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

புதுடெல்லியின் பாரம்பரிய ஆயுதக் கவசமான ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு இராணுவ உபகரணங்களை வழங்குவதில் இஸ்ரேல் இரண்டாவது இடத்தில் உள்ளது.

வளர்ந்து வரும் உறவுகள் பாதுகாப்புத் துறையில் மட்டும் அல்ல. விவசாயம் மற்றும் நீர் முகாமைத்துவத்தில், இந்திய அதிகாரிகள், இஸ்ரேலின் சர்வதேச வளர்ச்சி அமைப்பான மஷாவ் உடன் இணைந்து, எழும் தண்ணீர் நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கியுள்ளனர் என்று தி ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .