2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அதிரவைத்த ஆச்சரியம்!

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 05 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரியகுளம்:

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலட்சியத்தால் உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறியதால் அடக்கம் செய்ய முயன்ற போது குழந்தை கண் விழித்ததால், மீண்டும் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் தாசில்தார்நகர் வான் ஓட்டுனரின் மனைவியின் பிரசவத்துக்கு தேனி அரசாங்க மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்ததாக தெரிவித்தனர்.

 

காலை 8:00 மணிக்கு மருத்துவமனையில் பக்கெட்டில் குழந்தையை வைத்து அடக்கம் செய்ய கொடுத்துள்ளனர்.  அதன்பின்னர், பெரியகுளம் தென்கரை கல்லறையில் குழந்தையை அடக்கம் செய்ய குழி தோண்டினர். தாய்மாமன், பக்கெட்டை திறந்த போது குழந்தை கண்விழித்து, கை, கால்களை அசைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தையை தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர்.

குழந்தையின் தந்தை இது தொடர்பில் கூறுகையில், ' அரசாங்க மருத்துவமனை குழந்தை உயிரோடு விளையாடியுள்ளது. இதயத்துடிப்பு சீராக உள்ளதா என கண்காணிக்கவில்லை. இதுபோன்ற சம்பவம் யாருக்கும் ஏற்படக்கூடாது' என கண்கலங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X