Freelancer / 2022 ஜூலை 18 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நான்கு நாட்களாக போராட்டம் நடைபெற்றது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நான்காவது நாள் போராட்டத்தில், அந்த தனியார் பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர். எனினும் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயக்கின. சுமார் ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன்முடிவில், தற்போது ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே, தமிழகம் முழுவதும் இன்று 91% தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 89%, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 95%, சி.பி.எஸ்., பள்ளிகள் 86% இயங்கியுள்ளதாகவும், மாவட்டம் வாரியாக இன்று இயங்கிய தனியார் பள்ளிகள் விவரங்கள் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் 100% அளவிற்கு பள்ளிகள் இயங்கி வருகின்றன.
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிபிஎஸ், பள்ளிகளும் 100மூ இயங்கியது என்றும், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், நாகை, அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100% பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
18 minute ago
31 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
37 minute ago
2 hours ago