A.K.M. Ramzy / 2021 மார்ச் 15 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
அமமுகவும், தேமுதிகவும் தொகுதி உடன்பாடு கண்டுள்ளன. அதிமுகவுடன் கூட்டணி முறிந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதுவும் முறிந்த நிலையில் தேமுதிக அமமுக வுடன் தற்போது தொகுதி உடன்பாடு கண்டுள்ளது. 60 இடங்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கடந்த மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்டனர். அதில் அதிமுக தவிர மற்ற கட்சிகள் தோல்வியை தழுவின. சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக இரண்டுக் கட்சிகளிலும் இழுபறி நீடித்த நிலையில் அதிமுக பாமக முதலில் உடன்பாடு கண்டது. பின்னர் திமுகவில் விசிக முதலில் உடன்பாடு கண்டது.
தொடர்ந்து பாஜக, தேமுதிக இழுபறி நீடித்த நிலையில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் என முடிவானது. ஆனால் தேமுதிக தங்களுக்கு 23 தொகுதிகள் தேவை என பிடிவாதம் பிடித்தது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாமல் நீடித்தது. திடீரென தேமுதிக அதிமுக கூட்டணி முறிந்தது என அறிவித்தது. விஜயபிரபாகரன் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று ஒரு கருத்து எழுந்தது, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி என்ற கருத்து எழுந்தது, அமமுகவுடன் பேசுகிறார்கள் என்றும் கூறப்பட்டது. மக்கள் நீதிமய்யத்துடன் பேசவில்லை என தேமுதிகவினர் அறிவித்தனர். இந்நிலையில் நேற்றுக் காலை முதலே அமமுகவுடன் தேமுதிக பேசிவந்தது. சுதீஷும் டிடிவி தினகரனும் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று மாலை அதிகாரபூர்வமாக இரு கட்சியினரும் சந்தித்து உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அதன்படி அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள் என உறுதியாகியுள்ளது.
35 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago