2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அமெரிக்காவில் தமிழ்ப் பெண் சாதனை

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மையில் இடம்பெற்ற ` மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்‘ அழகி போட்டியில்,  தமிழகத்தை சேர்ந்த ‘பிளாரன்ஸ் ஹெலன் நளினி‘  வெற்றி வாகை சூடியிருந்தார்.

சுமார் 3000 பேர் வரை  கலந்து கொண்ட இப் போட்டியில், 52 பேர் மாத்திரமே இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பதும், அதில் நளினி மாத்திரமே தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் நளினி 2021-ஆம் ஆண்டுக்கான “மிசஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்” என்ற பட்டத்தையும், “கிளாமர் அச்சீவர்” என்ற துணைப்  பிரிவு பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் அண்மையில் நடைபெற்ற ‘மிஸ் உலக அழகி போட்டியில் கலந்துகொண்ட அவர் ‘Ms. International World People’s Choice Winner 2022‘ என்ற பட்டத்தையும்  வென்று சாதனை படைத்துள்ளார்.

‘ 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 14 வயது முதல் 60 வயது வரையிலான

 அழகிகள் இப்போட்டியில்  கலந்து  கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .