Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மே 09 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதலனுடன் உல்லாசமாக இருந்த வேளை குழந்தை அழுததால் தாய் ஒருவர் அக்குழந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சிக்கம்பட்டி புதூர் காடம்பட்டி பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த கலைவாணி என்பவர் அதே சூளையில் பணிபுரிந்து வந்த மல்லேஸ் என்பவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த செங்கல் சூளையில் இருவரும் தனிமையில் இருந்த வேளை கலைவாணியின் ஒருவயதான குழந்தை அழுதுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் குறித்த குழந்தையைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்நிலையில் குழந்தையின் கதறலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து விசாரிக்கவே குழந்தையின் உடல்நலம் சரியில்லை என்று கூறி நாடகமாடிவிட்டு குழந்தையை, சேலம் வைத்திய சாலையில் சேர்த்து விட்டு இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
இந்நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே பொலிஸாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமறைவான இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
8 hours ago
8 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
19 Jul 2025