2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஆசிரியர்கள் அலைபேசி பயன்படுத்த தடை

Editorial   / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளில் அலைபேசி பயன்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை தொடர்ந்து மீறுவோரின் போன்கள் பறிக்கப்படலாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திர மாநிலத்திலுள்ள பாடசாலைகளில் பாட நேரங்களின்போது ஆசிரியர்கள் அலைபேசி பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த நேரங்களில் தனிப்பட்ட விஷயங்களுக்காக அலைபேசிகளை ஆசிரியர்கள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதனால் கவன சிதறல்கள் ஏற்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இதனை தடுப்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

பாடசாலைக்கு  வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்ட பின்னர் ஆசிரியர்கள் தங்களது அலைபேசிகளை  சைலன்ட்டில் போட்டு, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்து விட வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர் அலைபேசி பயன்படுத்துவது முதலில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை பறித்து தலைமை ஆசிரியரிடம் கொடுக்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X