2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆபத்தான மயில் மீன் சிக்கியது

Editorial   / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமேசுவரம்

மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகளை சுற்றிலும் ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன.

பவளப்பாறைகள் அதிக அளவில் உள்ளதால் மீன்கள் இனப்பெருக்கம் செய்து வாழ்வதற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதி உகந்த இடமாக கருதப்படுகின்றது. அதனால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கிளாத்தி, களவாய், நகரை, கணவாய், சீலா, மாவுலா, விளை, பாறை, கட்டா உள்ளிட்ட பல வகையான மீன்கள் உள்ளன.

பல வகையான மீன்கள் கடலில் இருந்தாலும் இதில் ஒரு சில மீன்கள் மீனவர்களின் வலைகளை கிடைப்பது அரிது தான். அதில் ஒன்றுதான் மயில் மீன்.

இந்தநிலையில் பாம்பன் தென்கடல் பகுதியான குந்துகால் பகுதியில் இருந்து பைபர் படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நேற்று காலை பலவகை மீன்களுடன் கரை திரும்பினர்.இதில் சுமார் 10 கிலோ மற்றும் 5 கிலோ கிராம் நிறை கொண்ட அரியவகை மயில் மீன்கள் இருந்தது.

இது பற்றி மீனவர் அருளானந்தம் கூறியதாவது:-

 மற்ற மீன்களை விட மயில் மீன்கள் கடலில் அதி வேகமாக பாயும் தன்மை கொண்டது. இந்த மீன்கள் சிக்குவது மிக அரிது. அப்படியே வலையில் சிக்கினாலும் வலையைக் கிழித்துக்கொண்டு சுலபமாக கடலில் நீந்தி தப்பித்து விடும். மயில் மீன் மிக ஆபத்தான மீனாகும். இதன் வாய்ப்பகுதி அதிக கூர்மையுடன் இருப்பதால் வலையை கிழித்துக்கொண்டு மீனவர்களின் உடல்களையும் குத்திக் கிழித்து அதிக காயப்படுத்திவிட்டு எளிதில் தப்பித்து விடும். மயில் மீன் குத்தி ஒரு சில மீனவர்களும் இறந்துள்ளனர்.

மயில் மீன் வலையில் சிக்கினால் மிகவும் கவனமுடன் அதை வலையிலிருந்து பாதுகாப்பாக வெளியே எடுப்போம். மயில் மீன்களைப் போல் முரல் மீனும் ஆபத்தான மீன் தான். அரிய வகை மீனாக இருந்தாலும் மயில் மீன் எதிர்பார்த்த அளவு விலை கிடைக்காது ஒரு கிலோ ரூ.50க்கு மட்டுமே தான் விலை போகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .