2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஆபாச வீடியோ விவகாரம்: மதபோதகர் கைது

Ilango Bharathy   / 2023 மார்ச் 21 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கி தலைமறைவாகி இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  மதபோதகர்  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயமொன்றில் பணியாற்றிவந்த ‘பெனடிக்ட் ஆன்டோ ‘ என்ற 29 வயதான மதபோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குறித்த தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன்  அன்பாகப் பழகி அவர்களைத்  தனது காதல் வலையில் விழ வைத்து, அவர்களது  அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று, அதன் பின்னர் குறித்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி அவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார்.

 இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘பாதிரியாரின் லீலைகள்‘  என்ற பெயரில் அம்மதபோதகர்,  இளம்பெண்களுடன் இருந்த ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர், இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குறித்த மதபோதகர்  அப்பகுதியை விட்டுத் தலைமறைவாகினார்.

இந்நிலையில் பொலிஸாரின் தீவிர தேடுதலின் பின்னர், நாகர்கோவிலில் பண்ணைவீட்டில் தலைமறைவாக இருந்த பெனடிக் ஆன்டோவை  நேற்றய தினம்(20)  பொலிஸார் கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .