A.K.M. Ramzy / 2021 மார்ச் 31 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை
மத்திய அரசுக்கு ஆமாம்போடும் அரசாக அதிமுக உள்ளது என திருமங்கலம் கள்ளிக்குடியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பேசினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் திமுக வேட்பாளர் எம்.மணிமாறனை ஆதரித்து திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமார் பாரத் டெண்டர் கோரியதில் சரியான நிறுவனம் இல்லை எனக்கூறி மத்திய அரசு டெண்டரை ரத்து செய்தது. இங்கு நடைபெறுவது அதிமுக ஆட்சியல்ல. பாஜகவின் பினாமி ஆட்சி. தமிழ்க் கலாசாரத்தை மொத்தமாக டெல்லியில் கொண்டுபோய் அடகுவைத்துவிட்டனர். மத்திய அரசு எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அதை அப்படியே ஆமாம் போட்டு வரவேற்கின்றனர்.
விவசாயிகளை பாதிக்கக்கூடிய விவசாய திருத்தச் சட்டம், குடியுரிமைச் சட்டம் நிறைவேற்ற அதிமுக அரசு ஆதரவு கொடுத்தது. தற்போது அதே சட்டத்தை தேர்தலுக்காக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழக முதல்வர் கூறி வருகிறார்.சந்தர்ப்பத்திற்கேற்றவாறு மாறி மாறி பேசிவருகிறார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago