2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆயுஷ்மான் பாரத் அங்குரார்ப்பணம்

Freelancer   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு உடல்நலம் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்த பின்னர் தெரிவித்ததாவது,

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கும்.  

இன்று, நாட்டின் அனைத்து வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி போடுவது அல்லது சிகிச்சை அளிப்பது, அவர்களின் முயற்சிகள் தேசத்திற்கு மிகப்பெரிய நிவாரணம் அளித்தது.  கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு இது உதவியது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .