2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இந்திய இராணுவ அதிகாரி கின்னஸ் சாதனை

Freelancer   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய இராணுவ அதிகாரி  ஸ்ரீராம், 'வேகமாக தனி சைக்கிள் ஓட்டுதல் (ஆண்கள்)' பிரிவில் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் என்று பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

யூனியன் பிரதேசமான லடாக்கின் லே மாவட்டத்தில் இருந்து இமாச்சலப்பிரதேசத்திலுள்ள மணாலி வரை உள்ள 472 கிலோ மீற்றர் தூரத்தை வெறும் 34 மணிநேரம் 54 நிமிடங்களில் கடந்தார். 

கடினமான வானிலை சூழலில்  சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்த அவர், ஐந்து முக்கிய நிலைகளை கடந்து முன்னேறி, 34 மணிநேரம் 54 நிமிடங்களில் இலக்கை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இந்த நிகழ்வு 'ஸ்வர்ணிம் விஜய் வர்ஷ்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் 195ஆவது கன்னர் தினத்தை குறிக்கிறது என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தியா ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .