2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இம்ரானின் கருத்துக்கு இந்தியா பதிலடி

Freelancer   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் காஷ்மீர் பிரச்னை பற்றி பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு, `தீவிரவாத தீயை பற்ற வைத்து விட்டு, அதை அணைக்கும் தீயணைப்பு வீரன் போல்  பாகிஸ்தான் நடிக்கிறது,’ என்று இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. 

அமெரிக்காவின், நியூயோர்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 76ஆவது கூட்டம் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட வீடியோ பேச்சு வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

அதில், அவர் காஷ்மீர் விவகாரம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து  உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசினார். 

அதற்கு, அதே சபையில் ஐநா.வுக்கான இந்தியாவின் முதன்மை செயலாளர் ஸ்நேகா துபே பதிலடி வழங்கி பேசியதாவது,

ஐநா. சபை கூட்டங்களை தவறாக பயன்படுத்தி உலக அரங்கில் இந்தியாவுக்கு எதிராக பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட கருத்துகளை பாகிஸ்தான் தலைவர்கள் பரப்புவது இது முதல்முறை அல்ல. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பொதுமக்களை போல் சாதாரணமாக வாழ்ந்து வருவதை, உலக நாடுகளின் பார்வையில் இருந்து திசை திருப்பவே இதுபோன்ற முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

ஐ.நா. பாதுகாப்பு சபையால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் அளிப்பதில் பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் தலைவர்கள் தியாகி என புகழ்கின்றனர். 

தீவிரவாத தீயை பற்ற வைத்து விட்டு, அதை அணைக்கும் தீயணைப்பு வீரனை போல் பாகிஸ்தான் நடித்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் இந்த கொள்கையால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .