2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரு உயிர்களைப் பறித்த கருத்தடை மாத்திரை

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெங்களூரில் கருத்தடை மாத்திரையை  உட்கொண்ட  பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் வசித்து  வருபவர்  `தேபபிராத்`. இவருக்கு `பிரீத்தி` என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிக்கு  ஒரு வயதில் குழந்தையொன்று உள்ளது.

இந்நிலையில் அண்மையில் மீண்டும் கர்ப்பம் தரித்த பிரீத்தி, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததால் கருவை கலைக்க முடிவு செய்தார் .

இதுகுறித்து  தனது கணவர் தேபபிராத்திடம் கூறிய போது, அவர் வைத்தியரின் ஆலோசனை பெற்று கருவை கலைக்கும்படி தெரிவித்துள்ளார்.

எனினும் இதனைக் கண்டுகொள்ளதாத  பிரீத்தி, கருவைக்  கலைக்க கருக்கலைப்பு மாத்திரையினை   உட்கொண்டுள்ளார்.

இதனால் அவருக்கு கடும் ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பிரீத்தியை, கணவர் வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் கருக்கலைப்பு மாத்திரையை உட்கொண்டதால்  அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டே அவர் உயிரிழந்துள்ளார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .