Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 03 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய-ஐக்கிய இராச்சிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மூன்று அத்தியாயங்கள் மற்றும் குறிப்பாக இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் வாய்ப்பு குறித்து கவனம் செலுத்தும் என்று ஐக்கிய இராச்சிய - இந்திய வணிக சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் கெவின் மெக்கோல் தெரிவித்தார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் 26 அத்தியாயங்களில் 14 அத்தியாயங்கள் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தி பிரின்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“முதலீட்டாளர்களாக இந்தியாவில் தங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது அல்லது என்ன சட்டப்பூர்வ உதவி இருக்கிறது? இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் இல்லை என்றால், அது குழு மட்டத்தில் நடக்கும் முடிவெடுப்பதில் ஒரு காரணியாக மாறும்” எனவும் மெக்கோல் தெரிவித்தார்.
மேலும், அத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது இந்தியாவின் நலனுக்காகவும் இருக்கும் என்றும் அவர் வாதிட்டார்.
ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில், தீபாவளிக்குள் முடிவடையும் என்று திட்டமிடப்பட்டபோதும், மார்ச் 2023 க்குள் முடிக்க இந்திய அரசாங்கம் இப்போது எதிர்பார்க்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய இராச்சியம் இந்த புதிய காலவரிசையை பின்பற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்தாமல், லண்டன் வேகத்துக்கான தரத்தை சமரசம் செய்ய விரும்பவில்லை என்று மெக்கோல் கூறினார்.
ஆரம்ப கட்டத்தில் சுனக்-மோடி உறவு
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும், பிரதமர் நரேந்திர மோடியும் நீண்ட கால நண்பர்களாக இருப்பதன் முக்கியத்துவம் குறித்து மெக்கோல் முன்பு எழுதியுள்ளார்.
தற்போதைய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடனான மோடியின் உறவை இது எவ்வாறு ஒப்பிடுகிறது என்று அவரிடம் வினப்ட்டபோது,
“தனிப்பட்ட உறவு (மோடி மற்றும் சுனக் இடையே) ஆரம்ப கட்டத்தில் உள்ளது, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இல்லை. 2030ம் ஆண்டுக்கான வீதி வரைபடமும் இரு அரசாங்கங்களும் உறுதியுடன் உள்ளன," என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா-இங்கிலாந்து எதிர்கால உறவுகளுக்கான 2030 வீதி வரைபடம் - இதற்கு இந்திய-ஐக்கிய இராச்சிய தடையற்ற வர்த்தக ஒப்பந்த ஒரு முக்கிய படியாக இருக்கும் - மே 2021 இல் மோடி மற்றும் ஜான்சன் ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இரு தரப்பிலும் உள்ள அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சமரசம் செய்யத் தொடங்குவதை நாங்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
இந்திய ஆடைக்கான நன்மைகள்
இந்திய ஆடைகள், மருந்துகள், உணவு மற்றும் பானங்கள், தோல் பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் ஐக்கிய இராச்சியத்துனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மூலம் பயனடையலாம் என மெக்கோலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் நுழையும் இந்திய ஆடைகளுக்கு பூச்சிய வரி விதிக்கப்பட்டால் - தற்போதைய 9.6 சதவீதத்தில் இருந்து - அது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு எதிராக போட்டியிட உதவும் என்று கருதப்படுகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் நுழையும் இந்திய ஆடை தற்போது மற்ற போட்டியாளர்களுடன் "கேட்ச்-அப்" விளையாடுவதாக இந்தியாவின் பருத்தி ஆடை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (டெக்ஸ்ப்ரோசில்) நிர்வாக பணிப்பாளர் சித்தார்த்த ராஜகோபால், பிரின்டிடம் கூறினார்.
இந்திய மருந்து ஏற்றுமதி, ஐபி விதிகள் சர்ச்சை
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் செயல்படுத்தப்பட்ட இந்தியா-ஐக்கிய அரபு அமீரக விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில், ஐக்கிய அரபு அமீரகம் 90 நாட்களுக்குள் இந்திய மருந்துகளுக்கான ஒழுங்குமுறை அனுமதியை எளிதாக்க ஒப்புக்கொண்டது.
குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டது.
இந்திய மருந்துப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஒப்புதலை விரைவாகக் கண்காணிக்க இங்கிலாந்து தயாராக உள்ளதா என்று கேட்டதற்கு, சில இந்திய மருந்து வணிகங்கள் அமெரிக்காவிடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளன என்றும் ஐக்கிய இராச்சிய கட்டுப்பாட்டாளர்களிடம் அனுமதி பெறவில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன் என்றும் மெக்கோல் தெரிவித்தார்.
அறிவுசார் சொத்து என்பது இருதரப்பு வர்த்தகத்தின் ஓர் அம்சமாகும், இது ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
எஃப்டிஏ ஆவணத்தின் வரைவு நவம்பர் 2 அன்று கசிந்த பின்னர், சர்வதேச அரச சார்பற்ற அமைப்பு ஐபி அத்தியாயத்தை விமர்சித்தது, விதிகளை தீங்கு விளைவிக்கும் என்று கூறியது.
இது குறித்து மெக்கோலியிடம் வினவியபோது, "கசிந்த ஆவணம் தற்போது பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தில் இருப்பதாக நான் நினைக்கவில்லை" என்றார்.
“இந்த ஆவணத்தை அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்று இந்திய அரசு கூறியது. கசிவு எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை, இதனால் யாருக்கு லாபம் என்று எனக்குத் தெரியவில்லை, ”என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .