Freelancer / 2022 மே 20 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சிறையில் இருந்து 4 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச்சேர்ந்த வேலாயுதம், சதீஷ், ராஜகனி, விசாகர். இந்த 4 மீனவர்களும் மார்ச் மாதம் இந்திய எல்லையில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து, இலங்கை சிறையில் இருக்கும் 4 தமிழக மீனவர்களை மீட்டு தரும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மீனவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதங்கள் எழுதி வலியுறுத்தினார். இந்நிலையில், கடந்த மாதம் 4 தமிழக மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், 4 தமிழக மீனவர்களும் கொழும்பு நகரிலிருந்து நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் ஏர்இந்தியா விமானத்தில் சென்னைக்கு வந்தனர்.
48 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
01 May 2026