2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இலங்கையுடன் நெருக்கமடைய இந்தியா முனைப்பு

Editorial   / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

 

இந்திய வெளியுறவு அமைச்சு அதிகாரியான சிரிங்லா இலங்கை வருகையின்போது ஜனாதிபதி கோத்தபாய  ராஜபக்ஷ  மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருவரையும் சந்திப்பார் என்று தெரிகிறது.

இந்தியா மற்றும்  ஜப்பானுடன் செய்துகொண்டுள்ள கிழக்கு கொள்கலன் முனையம் East Container Terminal (ECT)    என்னும் திட்டத்தை  இலங்கை கைவிட்டிருப்பதால் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. இந்தியத் தரப்பிலிருந்து, அதானி துறைமுகம் இந்தத் திட்டத்தில் பணியாற்றவிருந்தது. இந்தக் கொள்கலன் முனையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த திட்டத்தில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருக்கக் கூடாதென்னும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு இருந்த நிலையில் வெளிநாடுகள் எதுவும் இதில் ஈடுபடவில்லை. இது சீன முதலீடுகளை எளிதாக்க அதன் வழியிலிருந்து வெளியேறுவதுபோல் தெரிந்தது.

சீனாவின் பொருளாதார நடவடிக்கைகளில் இந்தியா வெறுப்பாக இல்லாவிட்டாலும் துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி போன்றவற்றில் இந்தியாவின் நிதியுதவி திட்டங்களை  இலங்கை இதேமுறையில் கையாள வேண்டுமென்று  விரும்புகிறது.

திருகோணமலை எண்ணெய் பண்ணை தி;ட்ட குறைபாடு இந்தியாவுக்கு கவலையளிக்கும் ஓர் உதாரணமாகும்.

சீனாவுடன்  உறவாடும்போது இலங்கை, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களையும் கருத்தில் கொள்ளவேண்டுமென்னும் தேவை இந்தியாவுக்கு இருக்கிறது.

1987ஆம் ஆண்டின் ஓர் இருதரப்பு ஒப்பந்தம் இலங்கைத்துறைமுகம் இநதிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான எந்தவொரு நாட்டு  இராணுவத்துக்கும் இடமளிக்கக்கூடாது என்றும் கூறுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .