2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இளைஞரின் உயிரைப் பறித்த உடல் எடை

Ilango Bharathy   / 2023 ஜனவரி 04 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம், கருணீகர் தெருவை சேர்ந்தவர் ‘சூர்யா‘. 

21 வயதான இவர் அப்பகுதியில் ‘பால் பக்கற்‘  விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் தனது உடல் எடையைக்  குறைப்பதற்காக,  உடல் எடை குறைப்பு நிறுவனமொன்றை நாடிய சூர்யா, அங்கு தரும் மருந்துகளை கடந்த 10 நாட்களாக  உட்கொண்டு வந்துள்ளார்.

 இதன் காரணமாக நாளடைவில் அவரது உடல் எடை  குறைய ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 1ஆம் திகதி இரவு, சூர்யாவுக்கு எதிர்பாராத விதமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 இதனையடுத்து சூர்யாவை அவரது உறவினர்கள்  உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம்(03) சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து சோமங்கலம் பொலிஸார்  தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .