A.K.M. Ramzy / 2021 மார்ச் 31 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து அவரது தாயார் துர்கா ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களில் போட்டியிடும் திமுகவேட்பாளர்களை ஆதரித்து உதயநிதிதீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக சேப்பாக்கம் - திருவல்லிகேணி தொகுதியில் திமுகநிர்வாகிகள் மட்டும் தற்போது தீவிரவாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உதயநிதிக்கு ஆதரவாக அவரது தொகுதியில் துர்கா ஸ்டாலின் களமிறங்கியுள்ளார்.
அயோத்தி குப்பம் பகுதியில் உள்ள பெண்களைசந்தித்து அவர் வாக்கு சேகரித்தார்.அவர்கள் தந்த மனுக்களை பெற்றுகொண்டு, குறைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து பெண்கள் மத்தியில் துர்கா ஸ்டாலின் பேசும்போது, ‘‘இந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உதயநிதி தேர்வு செய்யப்பட்டால், உங்களின் அனைத்து பிரச்சினைகளும் கட்டாயம் தீர்த்து வைக்கப்படும்” என்றார்.
பிரசாரத்தின்போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் துர்காஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இத்தொகுதியில் தொடர்ந்துதுர்கா ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொளத்தூர் தொகுதியில் கணவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக துர்கா ஏற்கெனவே பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .