Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 08 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம்களிடையே கல்வியைப் பரப்புவதிலும், தீவிரமயமாக்கல் மற்றும் அடிப்படைவாதத்தை எதிர்ப்பதிலும் உலமாக்கள் முக்கியப் பங்காற்றுவதாக இந்தியாவும் இந்தோனேசியாவும் புது டெல்லியில் இடம்பெற்ற மாநாட்டில் தெரிவித்தன.
எல்லை தாண்டிய மற்றும் ஐஎஸ்ஸில் தூண்டப்பட்ட பயங்கரவாதம் குறித்து கவலைகளை எழுப்பிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியாவும் இந்தோனேசியாவும் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.
மதங்களுக்கிடையிலான அமைதி மற்றும் சமூக நல்லிணக்க கலாச்சாரத்தை வளர்ப்பதில் உலமாக்களின் பங்கு குறித்த மாநாட்டில் உரையாற்றிய போதே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவும் இந்தோனேசியாவும் முக்கியமான பங்காளிகள் மற்றும் பரந்த பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து, தோவல் சுட்டிக்காட்டினார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளும் முக்கிய பங்காற்றுவதுடன், பொருளாதாரம் செழித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மதங்களுக்கு இடையேயான கலாச்சாரம், அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில் உலமாக்கள் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று இந்தோனேசியாவின் அரசியல், சட்ட மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் பேராசிரியர் டொக்டர் மொஹம்மத் மஹ்ஃபுத் தெரிவித்தார்.
நல்லிணக்கமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தோனேஷியாவின் முன்னணி உலமா, அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத விவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு அமைச்சர் மஹ்ஃபுத்துடன் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்தது.
பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் தோவல் ஆகியோரையும் மஹ்ஃபுத் மற்றும் இந்தோனேசிய உலமாக்கள் சந்தித்தனர்.
மார்ச் 2022 இந்தோனேசியாவில் இடம்பெற்ற 'இரண்டாம் இந்தியா-இந்தோனேசியா பாதுகாப்பு உரையாடலுக்கு' டோவல் சென்றிருந்ததுடன், அந்நாட்டு அமைச்சர் மஹ்ஃபுத்தை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .