2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

உள்ளாடைக்குள் தங்கம்; யுவதி கைது

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 28 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேரள மாநிலம் ,கரிப்பூர் சர்வதேச விமானநிலையத்தில் நேற்று முன் தினம்(26) இளம் பெண்ணொருவர், டுபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்த குற்றத்திற்காகப் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டார்.

 சம்பவ தினத்தன்று, குறித்த யுவதியின் நடவடிக்கையில்  சந்தேகமடைந்த சுங்கப் பொலிஸார் அவரைத் தனியாக அழைத்து சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அவரிடம் தங்கம் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. ஆனால் அவர் தங்கம் தன்னிடம் இல்லை என மறுத்துள்ளார்.

 இதனையடுத்து யுவதி மீது சுங்கப் பொலிஸார் மேற்கொண்ட தீவிர சோதனையில் இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.9 கிலோகிராம்  தங்கத்தை பசைவடிவில் மாற்றி 3 பொதிகளில் அடைத்து, அதை அவரது   உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .