A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லி
ஊரடங்கில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், படுக்கைகள் பற்றாக்குறையால் வேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
டில்லியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ள்ளது. இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்புகளை நீக்குவது குறித்து நான் பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
டில்லியில் 65 சதவீத நோயாளிகள் 35 வயதுக்குட் பட்டவர்களாக உள்ளனர். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு, அங்கு படுக்கைகள் உள்ளனவா என பார்த்து செல்லுங்கள்.
அவசர நிலையாக இருந்தால் மட்டுமே படுக்கைகளில் நோயாளிகளை சேர்க்கவும். ஊரடங்கில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், படுக்கைகள் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் தோல்வி ஆகியவையால் ஊரடங்கு தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
11 minute ago
25 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
42 minute ago