Freelancer / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா (45)இவர் ஒரு செய்தியாளர். அங்குள்ள பத்திரிகை ஒன்றில் நிருபராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவரது மனைவி பெயர் கவுசல்யா கல்யாணம் ஆகி 21 வருடங்கள் ஆகிறது. ஆனால், குடும்பத்தில் எந்நேரமும் சண்டை, சச்சரவுக்கு ஆளாகியதால், கல்யாண வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தார் மிஸ்ரா.
இந்நிலையில், பின்சி பெரேரா என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவருடன், திருமணத்தை மீறிய உறவிலும் இருந்துள்ளார். கடைசியில் இந்த விடயம், வீட்டுக்கு தெரிந்த நிலையில் . கவுசல்யா வழக்கம்போல் சண்டை போட்டுள்ளார். எனினும், பெரேராவுடன் தொடர்ந்து உறவில் இருந்து வந்தார் மிஸ்ரா. இதனால், தகராறும், பிரச்சனையும் குடும்பத்தில் அதிகரித்திருந்த நிலையில், பாரத் மிஸ்ரா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இதற்கு நடுவில், மிஸ்ராவிடம், பெரேராவும் தகராறு செய்ய ஆரம்பித்துள்ளார். 2 பெண்களும் தினமும், ஆளுக்கு ஒரு பக்கம், சண்டை போடவும், உச்சக்கட்ட வெறுப்புக்கு ஆளானா மிஸ்ரா.துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த தற்கொலைக்கு முன்பு, பேஸ்புக்கில் மிஸ்ரா, "என் மரணத்திற்கு காரணம், மனைவி கவுசல்யாவும், காதலி பின்சி பெரேராவும்தான்.. இவர்கள் 2 பேரும் என்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய குழப்பம்தான் இந்த முடிவை எடுக்க வைத்துவிட்டது.” என்ற பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்
18 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
4 hours ago