A.K.M. Ramzy / 2021 ஜூலை 26 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கத்தால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று இரவு சிக்கிமிலும், இன்று அதிகாலை ஐதராபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: சிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு 8:39 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதேபோல் ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.அதிகாலை 5:00 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
22 minute ago
29 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
39 minute ago