2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஐந்து நக்ஸல்கள் சுட்டுக்கொலை

Freelancer   / 2023 ஏப்ரல் 04 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜார்க்கண்டில் பொலிஸார் நடத்திய என்கவுன்ட்டரில் நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சத்ரா பகுதியில் நக்ஸல்கள் அமைப்பைச் சேர்ந்த பலர் பதுங்கி உள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பொலிஸார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவரது தலைக்கு தலா ரூ.25 லட்சம், மற்ற இருவரது தலைக்கு தலா ரூ.5 லட்சம் வெகுமதி பொலிஸாரினால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .