Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிந்தியில்வெளியான `ஆஷிகி 2` என்ற திரைப் படம் மூலம் புகழ் பெற்றவர் பின்னணிப் பாடகர் அர்ஜித் சிங்.
இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாது கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில், ஸ்போடிஃபை (spotify) செயலியில் அதிகளவில் கேட்கப்பட்ட பாடல்களில் இவரது பாடல்களே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவரது இசை நிகழ்ச்சியைக் காண படையெடுத்துச்செல்லும் ரசிகர்களுக்கு அண்மையில் அவர் வெளியிட்டுள்ள, அனுமதிக் கட்டணத் தொகைப் பட்டியலானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பட்டியலின் படி தொடக்கக் கட்டணம் 999 ரூபாய் எனவும், ,சில்வர் மற்றும் கோல்ட் தர டிக்கெட்களின் விலை முறையே 1999 ரூபாய் மற்றும் 3,999 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இவ்வாறாக படிப்படியாக ஏறும் கட்டணம், ப்ரீமியம் லாஞ்ச் 1ல் முடிகிறது.
இதில் தான் ஒரு டிக்கெட்டின் விலை 16 லட்சம் ரூபாய் எனவும், ப்ரீமியம் லாஞ்சில் மொத்த 40 பேர் அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 16 லட்சம் ரூபாய் என்பது மிகவும் பெரிய தொகையென அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .