2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 17 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம், புடானில் 17 வயது சிறுமியொருவரைக்  காணவில்லை எனவும் அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் எனவும்  குறித்த சிறுமியின் பெற்றோர் அண்மையில் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த  சிறுமியைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், அச்சிறுமி, வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வயல்வெளியொன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுமி, கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .