2025 ஜூலை 19, சனிக்கிழமை

கணவனுக்கு கொதிக்கும் எண்ணெய் அபிசேகம்

Freelancer   / 2023 ஜூன் 15 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்காசி மாவட்டத்தில் கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (56). இவரது மனைவி முத்து (50). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் முத்துவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த கணேசன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் முத்து கள்ளத்தொடர்பை கைவிடாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து   கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் முத்துஇ கணவர் கணேசனிடம் ஏன் வேலைக்கு சொல்லவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு கணேசன்இ நீ கள்ளக்காதலை கைவிட்டால்தான் நான் வேலைக்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துஇ கொதிக்கும் எண்ணெய்யை கணவனின் முகத்தில் ஊற்றியுள்ளார். இதையடுத்து கணேசனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கணேசனை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X