2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கணவர்களே அவதானம்!

A.K.M. Ramzy   / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தஞ்சை :

 தஞ்சையில் குடும்ப பிரச்சினையில், கணவனை கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடியை சேர்ந்தவர் விவசாயிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்தில், வீட்டிலுள்ள அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து வந்து கணவன் மீது ஊற்றி உள்ளார் மனைவி. இதில் உடல் முழுவதும் படுகாயத்துடன் உயிருக்கு போராடியவரை அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் . அங்கு சிகிச்சை பெற்று வந்த விவசாயி சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து வல்லம் பொலிஸார் வழக்கு பதிவு மனைவியை கைது செய்தனர்.

 குடும்ப பிரச்சனையில், கணவனை கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .